மகாராஷ்டிர மாநிலம் புனே நகரை அடுத்துள்ள பீமா கோரேகானில் கலவரத்தை தூண்டியதாக 10 பேர் மீது காவல்துறையினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் நக்சல்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட தலைவரான திக்விஜய் சிங்கின் கைத்தொலைபேசி எண் இருந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீமா கோரேகான் தொடர்பான போராட்டங்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட கைத்தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நக்சல்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண், திக்விஜய் சிங்கின் கைத்தொலைபேசி எண் என விசாரணையில் தெரியவந்துள்ளதனையடுத்து மகாராஷ்டிர காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.