201
யாழ். கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற கார் – புகையிரத விபத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்துடன் கந்தர்மட பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கார் விபத்துக்குள்ளானது. மதியம் 1.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் காரினை செலுத்தி சென்ற யாழில் உள்ள பிரபல வர்த்தகரான பாலா என்பவரே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த குறித்த வர்த்தகர் ஆபத்தான முறையில் மீட்கப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Spread the love