ஐக்கியதேசிய கட்சி பாரிய கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜாதிஹ ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உட்பட சில கட்சிகளுடன் இது தொடர்பில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வேண்டுகோள் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் உறுப்பினர்கள் பலர் இந்த பாரிய கூட்டணியில் இணையவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரட்ணவும் அர்ஜுன ரணதுங்கவும் தனியான அமைப்பொன்றின் மூலம் இந்த கூட்டணியில் இணையவுள்ளனர். ஐக்கியதேசிய கட்சியின் இந்த முயற்சி வெற்றியடைந்ததும் புதிய பாரிய கூட்டணியில் இணையுமாறு ஜேவிபிக்கு அழைப்பு விடுக்கப்படலாம் எனவும், புதிய கூட்டணியின் சின்னமாக வைரம் அமையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.