இந்திய கடற்படைக்கு 3,500 கோடி ரூபா பெறுமதியில் 2 போர்க்கப்பல்களை அமைப்பதற்கு இந்தியா – ரஸ்யா நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் நேற்றையதினம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்திய பொதுத்துறை நிறுவனமான கோவா ஷிப்யார்ட் நிறுவனமும் ரஸ்யாவின் ரோசோபோன் எக்ஸ்போர்ட் நிறுவத்துக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கைச்சாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் 2 போர்க்கப்பல்களும் அமைக்கப்படும் எனவும் இதற்காக வடிவமைப்பு, தொழில் நுட்பம் மற்றும் சில உபகரணங்களை ரஸ்ய நிறுவனம் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் கட்டும் பணி 2020-ம் ஆண்டு ஆரம்பமாகி முதல் கப்பல் 2026-ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் எனவும் மற்ற போர்க்கப்பல் 2027-ம் ஆண்டு இணைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது