167
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்;பட்ட மூன்றுமுறிப்பு பகுதியில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினர் வசமிருந்த மக்களின் 59.8 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளுக்கான ஆவணங்களை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரனிடம் 20வது சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் இந்திக்க விக்கிரமசிங்க கையளித்துள்ளார்.
குறித்த காணி ஆவணங்கள் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்து அவரூடாக உரிய முறையில் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
Spread the love