138
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) விசேட ஒன்று கூடல் வியாழக்கிழமை (22) சாய்ந்தமருது விருந்தினர் விடுதி ஒன்றில் மதியம் ஆரம்பமானது.
இந்நிகழ்வு தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ( நுஜா) தலைவரும்இசிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமை தாங்கியதுடன் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) தவிசாளர் றியாத் ஏ. மஜீதின் நெறிப்படுத்தலில் இடம்பெறவுள்ள இம் மாதாந்த ஒன்று கூடலில் ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் புதிய அங்கத்தவர்களை ஒன்றியத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பாகவும் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது . இவ் நிகழ்வில் அமைப்பின் செயலாளர் பைசல் இஸ்மாயில் மற்றும் ஊடகவியலாளர்கள் பல பகுதிகளில் இருந்து கலந்து கொண்டிருந்தனர்.
பாறுக் ஷிஹான்
Spread the love