ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் ஆட்சி அதிகாரமா நாடா முக்கியம் என்பதனை உடனடியாக தீர்மானிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தால் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது பாரிய அரசியல் நெருக்கடியினை சர்வதேச அளவில் எதிர்கொண்டு வருகின்ற நிலையில் அதற்கு தீர்வு காண்பனை விடுத்து நாட்டின தலைவர் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.