குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தற்போதய சூழ்நிலையில் தமிழ் மக்களை விழிப்புணர்வுடனும் நிதானத்துடனும் செயற்படுமாறு மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் , மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஆளுனர் சபை உறுப்பினர்களுடன் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (23) அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
-குறித்த அறிக்கையில்,,,
கடந்த வாரங்களாக இன் நாட்டிலே ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகள் , அதைனைத் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தொடர்சியான ஜனநாயக மறுப்பு ஏதோச்சாதிகாரச் சூழல் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களையும் சந்தேகங்களையும் அச்சங்களையும் தோற்று வித்ததோடு நாட்டின் மீதும் அரசு மீதும் ஜனநாயகத்தின் மீதும் வெறுப்பும் கசப்பும் விரக்த்தியான சூழலும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் செய்வதறியாது திகைத்தது நிற்கின்றனர்.
கடந்த மூன்றாண்டுக்கு முன்னர் பல விதமான வாக்குறுதிகளையும் நம்பிக்கைகளையும் எதிர்பார்புளையும் உங்களுக்கு தந்து மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியமைத்தவர்களால் எது வித நன்மைகளையோ நீதியையோ தமிழ் மக்களது வாழ்வில் செய்யாது அனைத்து வாக்குறுதிகளும் வெற்று வாக்குறுதிகளாகி விட்ட சூழலில் தற்போதய அசாதாரண அச்சமிக்க சூழல் இன் நாட்டின் பெறுப்பு மிக்கவர்களால் வலிந்து ஏற்படுத்தப் பட்டுள்ளது. இவைகளுக்கு மத்தியில் ஒவ்வவொரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பழி சுமத்துவதிலும் சேறடிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதி நிதிகள் பொறுப்பற்றவர்களாய் ஜனநாயக மறுப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவது குறிப்பாக ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நாட்டின் அதி யுயர் மன்றமாகிய நாடளுமன்றத்தினுள் நடந்த வன்முறையும் அராஜகமான செயற்பாடுகளும் வேலியே பயிரை மேய்ந்த செயலாகி விட்டது.
எனவே அன்பார்ந்த மக்களே ஒரு நாட்டின் மிக பொரும் சக்தி மக்களே ஆவர்.மக்களின் எழுற்சியும் புரட்சியுமே அன் நாட்டின் ஏற்றமும் விருத்தியுமாகும்.மிகவும் இக்கட்டாக இந்த சூழலில் நீங்கள் மிகவும் நிதானத்துடனும் பொறுப்புணர்சியுடனும் சிந்திக்க வேண்டிய நேரமாகும்.
அரசியலில் இருப்பவர்கள் தமது அரசில் இலாபங்களுக்காகவும் தம்முடைய இருப்பபுக்களை தக்க வைப்பதற்காகவும் கூறும் பொய் பிரச்சாரங்களுக்கோ போலித்தனமான கொள்கைகளுக்கோ எடு படாமல் அமைதியுடனும் நியாயத்துடனும் சிந்தித்து கடந்த காலந்திலும் நிகழ் காலத்திலும் நடந்தவைகளை நிதானத்துடனும் சீர் தூக்கி பார்த்து விழிர்ப்புணர்வுடனும் முன் மதியுடனும் செயலாற்றினால் இப்படிப்பட்ட அராஜகமும் அநாகரிகமுமாக அநீதியுமான அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
எனவே ‘ஓன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்பதைப் போல மக்காகிய நீங்கள் ஓரு உயரிய இலச்சியத்துக்காக ஒன்று பட்டால் ஒரு உண்மையான மாற்றத்தை உருவாக்கலாம்.
ஆகவே நீதியும் சமாதனமும் சமத்துவமும் ஒளிமயமான எதிர் காலமுள்ள மாற்றத்தை உருவாக்க பொறுப்புணர்வுடனும் அமைதியுடனும் நிதானத்துடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.