பாராளுமன்றத்தில் 122 உறுப்பினர்களை கொண்ட தெளிவான பெரும்பான்மையை ஐக்கிய தேசிய முன்னணி பெற்றிருப்பதாகவும், அந்தவகையில் தெரிவுக்குழுவின் பெரும்பான்மை தமக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வை முன்னிட்டு இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் கருத்துரைத்த ரவுப் ஹக்கீம், இந்த முடிவை சபாநாயகர் இன்று சபையில் அறிவிப்பார் என்றும், அவ்வாறில்லாவிட்டால் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றும் குறிப்பிட்டார். 13 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சபாநாயகர் தலைவராக செயற்படுவார். ஏனைய பன்னிரண்டு பேரும் ஆளும் மற்றும் எதிரணியிலிருந்து தெரிவுசெய்யப்படும் நிலையில், பெரும்பான்மை தொடர்பாக இரு தரப்பிற்கும் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.