சீனா நிர்மாணித்து வரும் ஒரு சூழலியல் சுற்றுலாப் பூங்காவின் கட்டுமானப் பணிகளால் அருகிவரும் சீன ஸ்டர்ஜன் மீன்கள் 6,000 உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளதனையடுத்து அடுத்து கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கூபேய் மாகாணத்தில், யாங்ட்ஜீ ஆற்றில், நீண்ட காலம் வாழும் இந்த சீன ஸ்டர்ஜன் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் நிலையத்துக்கு அருகில் இந்த சுற்றுலாத் திட்டத்துக்காக ஒரு பாலம் கட்டப்பட்டுவந்தது.
தண்ணீர் மூலாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம், அதிர்ச்சி, சத்தம் போன்ற காணரமாக இந்த மீன்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து தற்போது கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு மீன்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.