அவுஸ்திரேலியாவில் தென் கிழக்கு பகுதி முழுவதிலும் நேற்றையதினம் கடுமையான புழுதிப்புயல் வீசியதனையடுத்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 500 கி.மீற்றர் பரப்புக்கு இந்தப் புழுதிப்புயல் வீசியதாகவும் சிட்னி தொடங்கி பல நகரங்கள் புழுதிப்புயலால் பாதிக்கப்பட்டதாகவும் காற்றின் தரம் மிகக்குறைவானதாக மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் உள்பட பல பகுதிகளில் வீதிகளே கண்களுக்கு தெரியவில்லை எனவும் உலர்ந்து போன மண்ணைக் கிளப்பி கடுமையான காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பலரும் பாதிக்கப்பட்டனர் எனவும் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு;ளளது
கடந்த ஓகஸ்ட் மாதம் முதல், அவுஸ்திரேலியா கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் புழுதிப்புயல் வீசியதால் வீதி மற்றும் விமானப்போக்குவரத்துகள் பாதிப்படைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.