163
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு சுமந்திரனே தலைவர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அமெரிக்கா எனவும் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்கப்போவதில்லை எனவும், கிழக்கில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ். மக்களை ஏமாற்றுவதாகவும் தமக்கு மஹிந்த ராஜபக்ஸ, கோத்தபாய ராஜபக்ஸவின் அணியே தேவை எனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love