தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் மெதகும்புர பகுதியில் வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் பூண்டுலோயா பிரதான வீதியில் மண்மேடு மற்றும் கற்கள் சரிந்து விழுந்துள்ளதனால் இதனை சீர் செய்வதற்கு பூண்டுலோயா காவல்துறையினரும் ;, வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.