இந்தியா பிரதான செய்திகள்

சத்தீஸ்கரில் 2 பெண்கள் உட்பட 4 நக்சல்கள் கைது


சத்தீஸ்கரில் 2 பெண்கள் உட்பட 4 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரின் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியான தண்டேவாடா மாவட்டத்தில் நேற்றையதினம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது 2 நக்சல் தீவிர வாதிகள் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பர்சூர் என்ற பகுதியிலும் நக்சல் தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து எரிப்பு, தண்டவாள தகர்ப்பு உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்களில் கைது செய்யப்பட்ட 4 தீவிரவாதிகளுக்கும் தொடர் புள்ளதென காவல்துறைத் தரப்புகள் தெரிவித்துள்ளன.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link