அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய 103 வயதுப் பெண்ணான ஆபிரிக்க மற்றும் அமெரிக்கருமான ஒலிவியா கூக்கர் மரணமடைந்துள்ளார் சுமார் 70 வருடங்கள் போராடிய இவர் அமெரிக்க கடலோரப்படையில்
அமெரிக்காவில் இதுவரை நடந்த நிறவெறி கொண்ட தாக்குதல் சம்பவங்களிலேயே மோசமானதாக கருதப்படும், 300 கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்ட 1921ஆம் ஆண்டு நடந்த துல்சா நிகழ்விலிருந்து உயிர் தப்பித்த ஒலிவியா தொடர்ந்து கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிறவெறிக்கு எதிராக போராடி வந்தார்.
நீதி மற்றும் சமத்துவத்திற்காக ஓயாமல் ஒலிக்கும் குரல் என ஒலியாவின் செயல்பாட்டை அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியான பராக் ஒபாமா அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது