176
பிரான்ஸ் நாட்டு படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது மாலியின் மிக முக்கிய ஜிகாதிய தலைவர்களில்; ஒருவரான அமடூ கூபா கொல்லப்பட்டதாக மாலி ராணுவம் தெரிவித்துள்ளது. மாலியின் மத்திய மோப்டி பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது கடந்த வெள்ளிக்கிழமையன்று அமடூ கூபா கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் படையினரால் கொல்லப்பட்ட கூபா மாலியிலும், புர்கினா பாசோ ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்த தாக்குதலை நடத்திய ஜமாஅத் நஸ்ரத் அல் இஸ்லாம் வால்-முஸ்லிமின் என்ற அமைப்பின் உயர்மட்ட தலைவர்களுள் ஒருவராவார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love