172
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சி மகாநாட்டில் பிரெக்ஸிற்றுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு அதன் தலைவர் டொனால்ட் ரஸ்க் பரிந்துரை செய்துள்ளார். பிரித்தானியாவின் சமரச நடவடிக்கையை தொடர்ந்து, இந்த உச்சி மகா நாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்ற தனது முடிவை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செத் மாற்றிக்கொண்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உச்சி மகாநாட்டை முன்னிட்டு பெல்ஜியத்தின் தலைநகரான புரூசெல்சுக்கு சென்ற பிரித்தானிய பிரதமர் தெரசா மே, அங்கு ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love