Home இலங்கைமகிந்தவுக்கு பெரும்பான்மை இல்லையென நிரூபிக்கப்பட்டால் அவரே ஒரு முடிவை எடுப்பார் என நம்புகின்றேன்

மகிந்தவுக்கு பெரும்பான்மை இல்லையென நிரூபிக்கப்பட்டால் அவரே ஒரு முடிவை எடுப்பார் என நம்புகின்றேன்

by admin

பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய 225 பேரைக் கொண்ட பெரும்பான்மையானது சபையில் நிரூபிக்கப்பட்டால் புதிய பிரதமரை நியமிக்கத் தான் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரதமர் நியமனம் தொடர்டபில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் மகிந்த ராஜபக்ஸக்கு பெரும்பான்மை இருந்தால் அவர் எந்த தடையுமின்றி பிரதமராக தொடரலாம் எனவும் அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லை என நிரூபிக்கப்பட்டால் அவரே ஒரு முடிவை எடுப்பார் என நம்புகின்றேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும் தானே பதவியிலிருந்து நீக்கி விட்டு, மீண்டும் அவரை நியமிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் எனவுலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More