முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்றையதினம் அழைக்கப்பட்டுள்ளார். 2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கி அவர் வெளிநாடு செல்ல உதவி வழங்கியமை தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்
இன்று காலை 10.00 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவில் அவரை முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் அவரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே இன்று அவர் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.