இந்தியாவின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரோரா வரும் டிசம்பர் 2ஆம் திகதி முதல் தலைமை தேர்தல் ஆணையாளராக பொறுப்பேற்பார் எனவும் குறிப்பிடப்பட்டள்ளது.
எதிர்வரும் வரும் 2019ஆம் ஆண்டு பாராளுளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுடன் சில மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில் இவற்றை நடத்தும் முக்கியப் பொறுப்பு சுனில் அரோராவிடம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் இருந்து 1980ஆம் ஆண்டு பட்ச் ஐஏஎஸ் அதிகாரியாக பணியைத் தொடங்கிய அரோரா மத்திய அரசிலும், ராஜஸ்தான் அரசிலும் பல முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போதைய இந்தியத் தலைமை தேர்தல் ஆணையாளர் ஓ.பி.ராவத்தின் பதவிக் காலம் வரும் டிசம்பர் முதலாம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அரோரா தலைமை தேர்தல் ஆணையாளராகப் பொறுப்பேற்பார் எனவும் இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.