Home பிரதான செய்திகள்20 ஓவர் கிரிக்கெட்டின் தரவரிசைப் பட்டியல்

20 ஓவர் கிரிக்கெட்டின் தரவரிசைப் பட்டியல்

by admin

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்டையிலான 20 ஓவர் போட்டி தொடர் முடிவின் அடிப்படையில் வீரர்கள் தரவரிசைபட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  அந்தவகையில் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்திலும் நியூசிலாந்தின் காலின் முன்ரோ இரண்டாவது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் அரோன் பிஞ்ச் ஒரு இடம் பின்னுக்கு சென்று 3-வது இடத்தை பெற்றுள்ளார். அஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர்நாயகன் விருது பெற்ற இந்திய வீரர் ஷிகர் தவான் 5 இடங்கள் முன்னேறி 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் முறையே முதல் 2 இடங்களில் தொடர்கின்றனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளதுடன் அஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் அடம் ஜம்பா 17 இடம் முன்னேறி 5-வது இடத்தை பெற்றுள்ளார். சகலதுறை ஆட்டக்காரார் தரவரிசையில் அவுஸ்திரேலிய வீரர் மக்ஸ்வெல் முதலிடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More