குழந்தை கடத்தல் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காகத் தனி செயலி ஒன்றினை உருவாக்கி விசாரணை செய்ய வேண்டுமென தமிழகக் காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
குழந்தைகள் கடத்தலைத் தடுக்க உத்தரவிடக் கோரிய வழக்குகளை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்து வருகின்ற நிலையில் நேற்றையதினம் குறித்த வழக்கில் முன்னிலையாகிய மாற்றம் இந்தியா என்ற அமைப்பின் இயக்குநர் நாராயணன் முன்னிலையாகி குழந்தைகள் கடத்தலைத் தடுப்பது தொடர்பாக எழுத்துபூர்வமான வாதங்களைச் சமர்ப்பித்தார்.
குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அனைத்துவிதமான கடத்தல்கள் குறித்த விசாரணை, மீட்பு நடவடிக்கைகள், கடத்தப்பட்டு மீட்கப்பட்டவர்களுக்காக ஏற்படுத்தப்படும் மறுவாழ்வுப் பணிகள் என்ன என்பது குறித்து கடந்த ஜூலை மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவின் நகலைத் தாக்கல் செய்தார்.
மீட்கப்பட்ட குழந்தைகள் வேறு வேறு பாதுகாப்பு மையத்தில் சேர்க்கப்படுகின்றனர் எனவும் இதனால் தங்களுக்கான குடும்பச் சூழலை குழந்தைகள் இழந்துவிடுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் மறுவாழ்வு என்ற பெயரில் உள்நாட்டிலேயே குழந்pதைகள் கடத்தப்படுவதனால், பாதிக்கப்பட்டவர்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லைஎன நாராயணன் தெரிவித்தார்.
அவரது தகவல்களைப் பதிவு செய்துகொண்டது நீதிபதிகள் குழந்தைகள் கடத்தல் குறித்து விசாரணை செய்ய காவல் துறையினர் தனி செயலியைப் பயன்படுத்தலாம் என அறிவுரை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது