கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். த மோர்னிங் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்றையதினம் 2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகிய போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து பாதுகாப்பு படைகளின் ரவீந்திர விஜேகுணரட்னவை புகைப்படம் பிடிப்பதற்காக முயற்சித்தமைக்காகவே ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது