Home சினிமாஇதுவரையில் 26 சர்வதேச விருதுகளை வென்ற ரு லெட் திரைப்படம் :

இதுவரையில் 26 சர்வதேச விருதுகளை வென்ற ரு லெட் திரைப்படம் :

by admin

இந்தியாவின் 65ஆவது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை வென்ற ‘ரு லெட்’ திரைப்படம் பல்வேறு விழாக்களில் பங்கேற்று வருவதுடன் 26 சர்வதேச விருதுக்களையும் வென்றுள்ளது.   65ஆவது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘ருலெட்’ திரைப்படம் வென்றது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. அத்துடன் விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.

வாடகை வீடு தேடி அலையும் ஒரு குடும்பத்தின் கதையை சித்திரிக்கும் இந்தப் படம் இதன்போது எதிர்கொள்ளும் சிக்கல்களையும்  சிரமங்களையும் யதார்த்தமாக பேசுகிறது ‘ருலெட்’ படத்தின் கதை. எமது சூழலில் இவ்வாறான குடும்பங்களில் இவ்வாறு எத்தனையோ வி‌டயங்கள் நடைபெறுகின்றன என்றும் இதை மற்ற நாட்டினரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதை உள்ளபடியே திரைப்படமாக்கி இருப்பதாக இயக்குநர் செழியன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ளனர். இதேவேளை இத் திரைப்படத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் அல்லது பொங்கலுக்கு பின்னர் திரையரங்குகளில் வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More