மிரட்டல்கள், நெருக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் தடைகளைத் தகர்த்தெறிந்து மாவீரர்களை வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தாயக மக்கள் நேற்று பகிரங்கமாக துயிலும் இல்லங்களில் நினைவுகூர்ந்துள்ளார்கள் என்றும் இது எமக்குத் திருப்தியை – மன நிறைவை அளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நினைவு தினக் கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசு அனுமதி வழங்கவில்லை எனப் போலி அரசான மஹிந்த அரசின் தகவல் திணைக்களம் மிரட்டல் அறிக்கை விட்டிருந்ததாக கூறியுள்ள சம்பந்தன் வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் கடந்த சில தினங்களாகச் செயற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
1 comment
துயிலும் இல்லங்களில் மாவீரர்களை நினைவுகூர்ந்துள்ளமை தமக்குத் திருப்தியை மற்றும் மன நிறைவை அளிக்கின்றது என்று தேர்தலில் வாக்குகளை பெற சம்பந்தன் கூறியுள்ளார் என்று நினைக்கின்றேன்.
மாவீரர் நாள் நிகழ்வில் நேரில் கலந்துகொள்வதை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு தனிப்பட்ட முறையில் மாவீரர்களை கொழும்பில் நினைவுகூர்ந்துள்ளதாக பொய் சொல்கிறார் பொல்லத் தெரிகிறது.