ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அதிருப்தி கொண்டுள்ள அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நேற்றைய தினம் ஜனாதிபதி செயலாகத்தில் இவ்வாறு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் இன்றைய தினம் அமைச்சுக்களுக்கு ஒதுக்கும் நிதியை தடுக்கும் வகையில் பிரேரணை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தால் என்ன செய்வது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையக் கூடாது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி எக் காரணம் கொண்டும் அவர்களை கட்சியிலிருந்து வெளியேற வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது