சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென்னாபிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 2-வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் 2-வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
அண்மையில் முடிவடைந்திருந்த இலங்கை – இங்கிலாந்து இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 3-0 என வெற்றியீட்டியிருந்தது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அன்டர்சன் ஒரேயொரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தமையினால் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து 2-வது இ
பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான யாசிர் ஷா முதல் இன்னிங்சில் 41 ஓட்டங்களைக் கொடுத்து 8 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 143 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டும் என 14 விக்கெட்டுக்கள் எடுத்திருந்தமையினால் இ ; 19-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதேவேளை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை அணி 7 ஆம் இடத்திலிருந்து 8 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான தோல்வியே இலங்கையின் பின்னடைவிற்கான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.