பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக அறிவித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், இன்றைய (29.11.18) சபை அமர்வின் போது, ஐக்கியதேசிய முன்னணியின் பக்கத்தில் அமர்ந்திருந்து, விசேட உரையொன்றை ஆற்றினார்.
குறிப்பாக குறுகிய காலத்துக்கான கொள்கையொன்றைத் தயாரிக்க வேண்டுமென்றும் அரசாங்கத்தின் அதிகாரத்தை யார் வைத்திருப்பதென்பதற்கு பதிலாக, இரண்டு தரப்பினருக்கும் அதிகாரம் கிடைக்கக்கூடிய வகையில், கொள்கையொன்றைத் தயாரிக்க வேண்டுமென்றும் இதன்போது கூறிய ரத்தன தேரர், மிக விரைவில் தேர்தலொன்றுக்குச் சென்று, மக்களது அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தி உ்ள்ளார்.