361
2018 ஆண்டிற்கான அல் ஹதீஜா முன்பள்ளி வருடாந்த பரிசளிப்பு பாடசாலை மண்டபத்தில் வியாழக்கிழமை(29) மாலை ஆரம்பமானது. நிகழ்வின் முதலில் முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசல் பிரதம இமாம் கிராஅத் ஓதினார். தொடர்ந்து தலைமையுரையை முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் எஸ்.ஏ.சி முபீன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து மாணவர்களின் இசையும் அசையும் நடனங்கள் கலை நிகழ்ச்சிகள் பெற்றோர்களிற்கான கலை நிகழ்ச்சிகள் என்பன நடைபெற்றன. அடுத்து மாணவர்களுக்கு யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பி.எம் சரபுல் அனாம் ஊடகவியலாளர் எம்.எஸ் லாபீர் ஆகியோர் பரிசில்களை வழங்கி வைத்தனர்.
பாறுக் ஷிஹான்
Spread the love