ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையும் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்குமிடையில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே குறித்த சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று மாலை 6.00 மணியளவில் இரா.சம்பந்தனையும், அதனைத் தொடர்ந்து மாலை 7.00 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணும் முகமாகவே இந்த சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
MY3 + TNA + UNF தலைவர்கள் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது…
158
Spread the love