ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிராக ரிட் கட்டளையொன்றைப் பிறப்பிக்குமாறு வலியுறுத்தி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இணைந்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இன்றைய தினமும் (30) எதிர்வரும் திங்களன்றும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. மேற்படி மூன்று கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேரும் கைச்சாத்திட்ட நிலையிலேயே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன அபேசேகர ஆகியோர் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.