216
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் எற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சமூ ஆர்வளர்களுக்கான மனித உரிமை தொடர்பான ஒரு நாள் கருத்தமர்வு இன்று வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளை அதிகரிக்கவும் , மனித உரிமை சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் மாவட்டம் சார்ந்து செயற்படும் சமூக ஆர்வளர்களை உள்ளடக்கி அவர்களுக்கான பயிற்சி கருத்தமர்வு இடம் பெற்றது. மனித உரிமை ஆணைகுழுவின் பிரந்திய பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஆர்.பிரியதர்சன் மற்றும் சட்டத்தரணி ஆர்.எல்.வசந்தராஜ் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த கருத்தமர்வில் மனித உரிமை மீறல்களை வெளிக் கொண்டு வருதல் மற்றும் சட்ட ரீதியான தெளிவூட்டல்கள் பற்றிய விபரங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love