169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஓதிய மலை பகுதியில் 32 அப்பாவித்தமிழ்மக்கள் கடந்த 1984.12.02 அன்று மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலை நாளினுடைய நினைவுதினம் ஆண்டு தோறும் திசம்பர் மாதம் இரண்டாம் திகதி நினைவு கூரப்படுகிறது.
அந்த வகையில் இவ்வாண்டும் 2018.12.02ஆகிய இன்றையநாளில் குறித்த படுகொலைநாளின் முப்பத்து நான்காம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வமைதியுடன் நடைபெற்றன. அதேவேளை படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியும் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
Spread the love