குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தனிமையில் வாழ்ந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பியோடியுள்ளது. படுகாயமடைந்த மூதாட்டியை குருதி வெள்ளத்திலிருந்த மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார்.
உடுவிலில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. எம் பொன்மலர் (வயது-72) என்ற மூதாட்டியே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலே மூதாட்டியைத் தாக்கினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த மூதாட்டியை அதிகாலையில் உணவு வழங்க சென்ற மகள் கண்ணுற்று அவசர இலக்கமான119 இற்கு அழைப்பினை மேற்கொண்டு உடனடியாக அம்புலன்ஸின் உதவியுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார். வீட்டிலே பெரிய வளர்ப்பு நாய் நின்றுள்ளது. அது குரைத்த சத்தம் கேட்கவில்லை. இரண்டு கைகளும் கொடூரமாக அடித்து உடைக்கப்பட்டுள்ளன.
தலைப்பகுதி,மற்றும் முகங்கள் முழுவதும் அடிகாயங்கள் காணப்படுகின்றன. கொள்ளையிடும் நோக்கத்தோடு இச்சம்பவம் இடம்பெறவில்லை என தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் தாதியராக பணியாற்றும்பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகளின் கணவர் தெரிவித்துள்ளார்.
000
1 comment
72 வயது உள்ள பெண்ணின் தலைப்பகுதி தாக்கப்பட்டு , முகம் அடிக்கப்பட்டு, மற்றும் கைகள் உடைக்கப்பட்டுள்ளது.
இவை போன்றவற்றை நிறுத்த தமிழ் அரசியல் வாதிகள் என்ன செய்யப்போகின்றார்கள்?
Comments are closed.