194
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இருவருக்குமிடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love