Home இலங்கை மஹிந்தவுக்கும் அவரது அமைச்சரவைக்கும் எதிரான மனுவின் விசாரணை தொடர்கிறது…

மஹிந்தவுக்கும் அவரது அமைச்சரவைக்கும் எதிரான மனுவின் விசாரணை தொடர்கிறது…

by admin


ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று இரண்டாவது தினமாக விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் கடந்த 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சார்பான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான மனுவை இன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More