இஸ்ரோவினால் தயாரிக்கப்பட்ட அதிக எடையைக்கொண்ட அதிவேக இணைய சேவையை அளிக்க உதவும் வகையில், ஜிசாட்–11 செயற்கைக்கோள் இன்று அதிகாலை பிரான்சில் உள்ள கயானாவில் இருந்து ஏரைன் – 5 என்ற ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது இந்தியாவின் தொலைதொடர்புக்கான அதிக நிறை கொண்ட இந்த செயற்கைக்கோள் ஜிசாட்–11 5,854 கிலோ நிறை கொண்டது.
கடந்த மார்ச் 26 திகதி ஜிசாட்-11யை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருந்த போதும் அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த முயற்சி தள்ளிவைக்கப்பட்ட நிலையில் அதன் குறைபாடுகள் ள் சரி செய்யப்பட்டு இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது
இந்த செயற்கைக்கோள் மூலமாக,இந்தியாவில் இதுவரை இணைய சேவை பெறாத பகுதிகள் கூட பயன் பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஜிசாட் -11 செயற்கைக்கோளுடன், தென்கொரியாவின் ஜியோ– கோம்ப்சாட்2ஏவும் ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது