உளவு பார்த்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய கல்வியாளர் தான் அங்கு உளவியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். கைகளில் விலங்கிடப்பட்டு நாள் முழுவதும் நிற்க வைக்கப்பட்டதாகவும் இதனால் தமக்கு தற்கொலை எண்ணங்கள் வந்ததாகவும் 31 வயதான மத்யூ தெமரிவித்துள்ளார்
தான் அங்கு எவ்வித உளவு வேலையும் பார்க்கவில்லை எனவும் அவர்கள் தனக்களித்த சித்திரவதையை நிறுத்துவதற்காகவே எம்16இல் தலைவராக இருந்ததாக ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும் மத்யூ 100 சதவிகிதம் குற்றவாளிதான் எனவும் அவரை தாம் மன்னித்துவிட்டோம் எனவும் அமீரகம் தெரிவித்துள்ளது.உளவு பார்த்ததாக கைது செய்த மேத்யூவை அமீரகம் அண்மையில் விடுதலை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது