குழந்தைகளை கல்வி மற்றும் ஏனைய விடயங்களில் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதன் மூலம் பிள்ளையார் பிடிக்க போய் அது குரங்காக மாறிவிடுவது போன்று அமைந்துவிடும் என கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஆரம்ப பிள்ளைப் பருவ உதவிக் கல்விப் பணிப்பாளர் விந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அன்னை இல்லம் முன்பள்ளியில் இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்
குழந்தைகளை அவர்களின் வளர்ச்சிப் போக்கு அமைவாக வளர்த்தெடுக்க வேண்டும், அவர்களின் படிப்படியான வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர எடுத்த எடுப்பிலேயே அளவுக்கு மீறிய சுமைகளை சுமத்தக் கூடாது. அது ஆரோக்கியமான பிள்ளை சமூகத்திற்கு பொருத்தமற்றது எனத் தெரிவித்த அவர்
எக்காரணம் கொண்டு பெற்றோர்களும், சரி ஆசிரியர்களும் சரி பிள்ளைகளை ஏனையவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் எதை சாதிப்பதற்காக நாம் அவ்வாறு பிள்ளைகளை ஒப்பிடுகின்றோமா அதற்கு மாறாகவே நடந்துவிடும் ஆதாவது பிள்ளையார் பிடிக்க அது குரங்காக மாறிவிடுவது போன்று நிகழ்ந்துவிடும்.
அத்தோடு போன்ற எதிர் மறையாகவும் பிள்ளைகளுடன் பேசுவது தவிரிக்கப்படல் வேண்டும் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும், தட்டிக்கொடுக்க வேண்டும் இதன் மூலேமே ஆரோக்கியமான குழந்தைகள் சமூக்கத்தை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார். இந் நிகழ்வில் அருட்தந்தையர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்