பாராளுமன்ற முறையின் அடிப்படையில் 19 ஆவது அரசியலமைப்பில் இருக்கும் முரண்பாடான அல்லது பிரச்சினைக்குரிய சரத்துகளை திருத்தி மாற்றியமைக்க தாம் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக அறிவித்துள்ளார். இது தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
அத்துடன் திருத்தச்சட்டத்தின் ஊடாகவே சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை, ஜனநாயக ரீதியிலான நிறுவனக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சாதகமான பெறுபேறுகளை எமது சமூகம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவை நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் மக்கள் பெற்றுக்கொண்ட உண்மையான வெற்றியாக அமையும் அதேவேளை, தாய் நாட்டின் நவீன யுகத்தை நோக்கிய பயணத்திற்கும் இன்றியமையாததாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
19வது திருத்தச்சட்டத்தில் ஏதேனும் நடைமுறை ரீதியிலான குறைபாடுகள் காணப்படுமாயின் இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தின் கருப்பொருள் மற்றும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியிலான விடயங்களை பாதுகாத்து, பலப்படுத்தி அரசியல் ரீதியில் பிரச்சினைக்குரிய விடயங்களுக்கான திருத்தங்களை பாராளுமன்ற நடைமுறைக்கமைய மேற்கொள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அர்ப்பணிப்புடன் இருக்கின்றார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.