ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான 67 வயதான ஷாபாஸ் ஷெரீப் ஊழல் வழக்கு தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் 15ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். அவர் அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகித்த போது ஆஷியானா வீட்டு வசதி ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
தொடர்ந்து காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றையதினம் அவர் லாகூர் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் இந்த நிலையில் அவரை மேலும் 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு காவல்துறை கோரிக்கை விடுத்த போதும் அதனை மறுத்த நீதிமன்றம் எதிர்வரும்; 13ம் திகதிவரை ர நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.
டுத்து அவர் காட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது