காஷ்மீர் மாநிலத்தில் கடும் குளிர் நிலவுவதால் புகழ் பெற்ற தால் ஏரி உறைந்துள்ளது. காஷ்மீரில் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி உலகளவில் பிரபலமான ஏரி, சுற்றுலாப்பயணிகளின் கவனத்தினை ஈர்ந்த ஏரியாகும். இதனால்தான் இந்த ஏரி, காஷ்மீர் மகுடத்தில் வைரக்கல் எனும் சிறப்புக்குரிய தால் ஏரியின் கரையோரப் பகுதி உறைந்து விட்டது. அங்கு கடுமையான கடும் குளிர் நிலவி வருவதனால் காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் குழந்தைகளையும் , முதியவர்களையும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீநகரில் வெப்ப நிலை மைனஸ் 4 டிகிரியாக குறைந்து விட்ட தால் ஏரி மட்டுமல்லாமல், பிற நீர் நிலைகளும் உறைந்து போய் உள்ளன எனவும் குழாய்த்தண்ணீரும் உறைந்து போய் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது