172
கிளிநொச்சியில் எதிவரும் 09,10 ஆம் திகதிகளில் வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் எனும் தொணிப்பொருளில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓவியர்களின் கண்காட்சி இடம்பெறவுள்ளது. இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓவியர்கள் சிலர் இணைந்து வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள் என்ற ஒரு குழுவை 2017 மாசி மாதத்திலிருந்துசெயற்படுத்தி வருகின்றனர். இக்குழு தங்களது சுய அர்ப்பணிப்புடன் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. அந்த வகையில் . இக்குழுவின் ஊடாக முல்லைத்தீவிலும், கொக்கட்டிச்சோலையிலும், மட்டக்களப்பிலும் கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் நோக்கம் பெண்களுக்கும், அனைவருக்கும் வன்முறைகளற்ற மகிழ்வான வாழ்வு அத்தோடு ஓவியத்தில் ஈடுபாடுள்ள மாணவர்களுக்கும் இளந்தலைமுறையினருக்கும் சமூக மாற்றத்திற்கான ஓவியங்கள் பற்றிய முன்னுதாரணங்களை வெளிப்படுத்தலும் ஓவியத்துறையில் ஊக்குவித்தலும் ஆகும் என இக் குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமலா வாசுகி, ப.நிரஞ்சன், மு.தா.பா.ருக்சானா, கோ. மதீஸ்குமார், வெ. ஜதீஸ்குமார்,த.வினோஜா, க.துஸா, அ.கீதாநந்தி, தி.திசாந்தினி, பா.மேரிநிருபா, ப. ராஜதிலகன்,சு.நிர்மவாசன் ஆகிய ஓவியர்களின் ஓவியங்களே காட்சிப்படுத்தப்படவுள்ளன.
Spread the love