மேகேதாட்டு அணை அமைப்பதற்கு தமிழக முதல்வர் ஒத்துழைப்பு தரவேண்டும் என இருகரம் கூப்பி வேண்டிக்கொள்வதாக கர்நாடக மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் மேகேதாட்டு அணை இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும் எனவும், சேமிக்க வேண்டிய நீரை ஒவ்வொரு ஆண்டும் வீணாக கடலுக்குச் செல்வதை தடுக்க மேகதாது அணை தேவை எனவும் தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு அணை காட்டினால் அதில் 67 டிஎம்சி நீரை சேமிக்க முடியும் எனத் தெரிவித்த அவர் சரியான அளவு மழை இல்லாத சமயத்தில், இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும் அணையாக இது இருக்கும் எனவும் தெரிவித்துள்ளர்h.
மேலும் தான் தமிழ்நாட்டோடு சண்டையிட விரும்பவில்லை எனவும் தன்னுடைய பல சகோதரர்கள் தமிழகத்தில் வசிக்கிறார்கள் எனவும் தெரிவித்த அவர் தங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என தமிழக மக்களிடமும், தமிழக முதல்வரிடமும் இருகரம் கூப்பி வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.