சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில், நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் (Kane Williamson) இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மற்றும் அவுஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்டைத் தொடர்ந்தே வெளியிடப்பட்ட தரவரிசையிலேயே, மூன்றாமிடத்திலிருந்த வில்லியம்சன் ஒரு இடம் முன்னேறி இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 228 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே வில்லியம்ஸ் இவ்வாறு இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 37 ஓட்டங்களையே பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி புள்ளிகளை இழந்துள்ள நிலையில், வில்லியம்சனுக்கும் கோலிக்குமிடையில் ஏழு புள்ளிகள் வித்தியாசமே காணப்படுகின்றது.
இந்தநிலையில் நிலையில் தனது முதலாமிடத்தைத் தக்க வைப்பதற்கு நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் சிறப்பான பெறுபேறுகளை கோலி வெளிப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.