191
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ள நிலையில் , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்றும் பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற நிலையியற் கட்டளை மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய பாராளுமன்றத்தை கூட்டும் வரை சபை அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்தத் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
Spread the love