ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கொண்டுவரப்படும் நம்பிக்கை பிரேரணையை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றுகாலை கூடி முடிவொன்றினை எடுக்கவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இன்றுகாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி இது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும் அந்த முன்னணியினால் பிரேரிக்கப்படும் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கும் தாம் ஆதரவு வழங்குவதாக 14 கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான பிரேரணைக்கு கூட்டமைப்பினர் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது