1000 ரூபா அடிப்படை சம்பள உயர்வினை வலியுறுத்தி கடந்த 07 நாட்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பின்போது, எதிர்வரும் 19 ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்வொன்றை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி உறுதி வழங்கியதனையடுத்து வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியாது எனவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப் போவதில்லை எனவும் முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.