உலகிலேயே அதிகளவில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இலங்கை முதலிடத்தை வகிப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
இறுதிப் போரின் போது இலங்கை அரச படைகளிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து அவர்களது குடும்பத்திற்கு இராணுவம் பதில் தர வேண்டும் என்றும் அவர் மீளவும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் 2019 மே 17 முதல் 19 வரை காணாமல் ஆக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் நேற்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையிலேயே மீண்டும் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிரகாரம் குறித்த நாட்களில் மாத்திரம் இலங்கை அரச படைகளிடம் சரணடைந்த 500 தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகளவில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இலங்கையும் காணப்படுகின்றதாகவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை உலகில் ஓரே இடத்தில் ஒரே நேரத்தில் 500 பேரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து அவர்களது குடும்பத்தார் பதில்களை தெரிந்துக் கொள்ள வேண்டியதுடன், அது குறித்த உண்மைகளை அறிந்துக் கொள்வது அவர்களது உரிமை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.