Home இலங்கைமன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது….

மன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில் கடந்த வாரத்தில் இரும்பு கம்யினால் கட்டப்பட்ட நிலையில்  ஒன்று கிடைக்கப்பெற்றமை எவ்வளவு கோரமாக சித்திரவதை செய்யப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு அடிமைகளாக கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்று உண்மை வெளிவந்துள்ளதாக  முன்னாள் வடமாகண மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மன்னாரில்  இன்று (13.12.18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

மன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மன்னார் சதொச மனித எலும்புக்கூடுகளை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு தூரக பிரதிநிதிகள் மன்னார் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.தொடர்ந்தும் மன்னார் மனித புதைகுழியில் மனித எலும்புக்கூடுகள் மீட்க்கப்பட்டு வருவது இன்னமும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. 21 குழந்தைகள் உற்பட பல எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் என்ற காரணத்திற்காக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற நிலையில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும் என எல்லோரும் எதிர் பார்க்கின்றனர். இந்த சம்பவம் எப்போது நடைபெற்றது, இந்த சம்பவத்திற்க்கு யார் உரியவர்கள், யாரால் கொல்லாப்பட்டர்கள் என்ற உண்மை வெளிவர வேண்டும்.

வடக்கு கிழக்கில் இராணுவம் உற்பட முப்படையினறும் வெளியேறிய அத்தனை இடங்களிலும் மனித புதை குழி இருக்கலாம் என சந்தேகம் எழுத்துள்ளது. எனவே இவை அனைதும் சர்வதேச மத்தியஸ்துடன் கண்கானிப்பின் கீழ் அத்தனை மனித புதைகுழிகளும் கிலரப்பட வேண்டும். இதனூடாக எதிர் காலத்திலாவது ஈழத் தமிழர்கள் இன அழிப்புக்கு ஆளாகமல் இருக்க வேண்டும் என விரும்புகின்றோம். எனவே இப்போது தெற்கில் ஏற்பட்டுள்ள இந்த குழப்ப நிலையில் அங்கிருக்கும் பேரினவாத கட்சிகள் எதுவாகவும் நாட்டை ஆண்டு விட்டு போகட்டும்.

ஆனால் எங்களுக்கு இன்று வரை மனித புதைகுழி தொடர்பாக ஆழமான கருத்து அல்லது அழுத்தம் வழங்கப்படாத நிலையில் இந்த புதைகுழி தொடர்பான உண்மைகள் வெளிவருவதன் ஊடக பல உண்மைகள் வெளிவரும் வாய்ப்புகள் உருவாகும். என்று நம்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More